top of page
Search

அறிந்து ஆற்றி ... 515

12/12/2022 (648)

ஒரு வேலையை, ஒருத்தருக்கு கொடுப்பதற்கு முன், இதனை இதனால் இவன் முடிப்பானா என்பதை பார்க்கனும் என்று குறள் 517 ல் சொன்னார் நம் பேராசான்.


அதுதான் ரொம்ப முக்கியம்.


இவன், இதிலே இந்த பட்டம் வாங்கியிருக்கான்; இவனுக்கு எல்லா விஷயமும் தெரியும்; இதிலே இவன் சிறந்தவன் என்றெல்லாம் பார்க்கனுமா என்றால் பார்க்கனும்தான்.


ஆனால், நம்ம பேராசான் எது மிக மிக முக்கியம் என்கிறார் என்றால், அவனுக்கு வேலையின் தன்மையை அறிந்து அதற்கேற்றார் போல செய்து முடிக்க முடியுமா என்பதை முதலில் பாருங்க என்கிறார். செயல் வீரனாக இருப்பது முக்கியம்.


ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?


அறிந்து ஆற்றி செய்கிற்பாற் கல்லால் வினைதான்

சிறந்தான் என்று ஏவற் பாற்றன்று.” --- குறள் 515; அதிகாரம் – தெரிந்து வினையாடல்


வினைதான் அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் = எந்தச் செயலையும்தான், அறிந்து அதற்கேற்றார் போல செய்து முடிப்பவருக்கு அல்லால்;

சிறந்தான் என்று ஏவற் பாற்று அன்று = அவன் சிறந்தவன் என்று கேள்விப்பட்டதை மட்டும் வைத்துக் கொண்டு கொடுக்கக்கூடாது.


“In pursuit of happyness” 2006 ல் வெளிவந்த ஒரு திரைப்படம். கிறிஸ் கார்ட்னர் (Chris Gardner) என்பவரின் வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்பட்டது.


அதிலே Will Smith என்பவர் கிறிஸ் கார்ட்னர் ஆக நடித்திருப்பார். அதிலே அவர் ஒரு வேலைக்காக நேர்முகத் தேர்வுக்குச் (Interview) செல்வார். அவருக்கு தகுதிகளும் இருக்காது, அனுபவமும் இருக்காது. பின் எப்படி பணியாற்றுவீர்கள் என்று கேட்ட தற்கு கீழ் வருமாறு பதில் அளிப்பார்:


Chris Gardner: “Can I say something? hmm, I'm the type of person that if you ask me a question and I don't know the answer, I'm gonna tell you that I don't know. But I bet you what, I know how to find the answer and I will find the answer.”


கிறிஸ் கார்ட்னர்: “நான் ஒன்று சொல்லட்டுங்களா? ம்ம், நீங்கள் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டால், எனக்கு பதில் தெரியவில்லை என்றால், எனக்குத் தெரியாது என்று சொல்லும் வகையைச் சேர்ந்தவன் நான். ஆனால் நான் உங்களுக்கு என்ன பந்தயம் கட்டுகிறேன் என்றால், பதிலை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று எனக்குத் தெரியும், நான் பதிலைக் கண்டுபிடிப்பேன்.”


இதுதான் செய்து முடிக்கும் திறன்.


பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்




Post: Blog2_Post
bottom of page